மொத்த சனம் மூச்சு இருக்கும் காத்து அவன்!
பாற வெட்டி, பாத வெட்டும் ஊத்து அவன்!
உன்னத்தானே அந்தரத்தில், தாங்கி நிக்கும் பூமி அவன்!
தங்கும் புகழ் எங்கும் உள்ள, ஏழடுக்கு மான மவன்!
அந்த தீயும் அவன், தீபம் அவன்!
அட உத்து பாத்தா நீயும் அவன்!
ஆராரிராராரோ
யாரிங்கு நீயாரோ?
நீ வேலி கட்ட பூமி பந்து செய்தாரோ?
கீச்சொன்று கேட்காதோ?
பூ வாசம் தாக்காதோ?
உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ?
உயிரே, உயிரே, உயிரே!
ஒரு புது முகம் கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம்
மனமே, மனமே, மனமே!
நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம்
யாரோ கொடுத்த கனவை
தினம் கவ்வி கொண்டு ஓடும் இந்த அச்சடித்த நாளை விட்டு வா!
வா தலைவா, தலைவா, தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா!
வா தலைவா, தலைவா, தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா!
வா தலைவா, தலைவா, தலைவா
வேறு யார் உனக்காய் வருவா?
வா தலைவா, தலைவா, தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா!
உன்னை முதலென கொண்டு விரிந்திடும்
நீட்சியை தான் உலகம்
உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம்
உன்னிடமும் அடங்கும்
உன் பயணத்தில் எல்லாமே பாதை
நீ உனக்குள் சென்றாலே போதை
உன் கூட வரும் ராஜாங்காத்தை
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா?
உயிரே, உயிரே, உயிரே!
ஒரு கூட்டு குயில் உள்ளே இருந்தால் அருவிகள் அறிந்திடுமா?
வா தலைவா, தலைவா, தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா, தலைவா, தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா
வா தலைவா, தலைவா, தலைவா
வேறு யார் உனக்காய் வருவா?
வா தலைவா, தலைவா, தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா