ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் யூ டச் மீ
கண்ணிலே தீயை வைத்தாய்
நெஞ்சிலே பூவை வைத்தாய்
என்னிலே உன்னை வைத்தாய்
உன்னிலே என்னை தைத்தாய்
அழகாலே தூண்டில் வைத்தாய்
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய்
ஓ பேபி …
பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்
நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்
அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்
கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்
காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம்
கண்ணை கட்டிக்கொண்டு அட என்னடா பாடம்
ஓ பெண்ணே மறந்தாய்
நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்
முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
இன்று மண்ணோடு நான் சரிந்தேன்
அழகாலே தூண்டில் வைத்தாய்
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய்
நீயே நீயே ஆசை தந்து போனாய்
ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்
உன்னை இன்று காதலித்த சாபம்
வாழும் காலம் வந்து வந்து போகும்
காதல் காயம் தந்தால் நீ காரணம் கேட்காதே
பேரைக்கேட்டு என்றும் கடல் பூக்கள் பூக்காதே
ஓ பெண்ணே பிறந்தாய்
தேடும் முன்பே தொலைந்தாய்
காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா
அதில் காணாமல் போனேன் நானம்மா
ஓ பேபி …
Oh Baby was written by Na. Muthukumar.
Oh Baby was produced by Yuvan Shankar Raja.
Yuvan Shankar Raja released Oh Baby on Tue Dec 08 2015.