1.நாட்கள் கடந்து சென்றதே என்று கலங்குகின்றாயோ?
காலங்கள் வீணானதே என்று புலம்புகின்றாயோ?
காரியம் வாய்க்காமல் போனதே என்று பதறுகின்றாயோ?
இழப்புகள் உன்னை சூழ்ந்ததால் இதயம் உடைந்து போனாயோ?
எனக்கென்று யாருமில்லை என்று நீ கலங்கலாம்.
உனக்கொருவர் இருக்கின்றார் காலங்காதே மனமே.
வாக்குரைத்த தேவன் அவர் மனிதன் அல்லவே.
சொன்னதை செய்யுமளவும் கைவிடவே மாட்டார்.
கழுகைப்போல எழும்பிடுவாய், புதுபெலன் அடைந்திடுவாய்.
வெட்கப்பட்ட இடங்களிலே தலையை நிமிரச் செய்வார்
அல்லேலூயா மூழ்கி நீ போவதில்லை.
அல்லேலூயா இயேசு ஜீவிக்கின்றார்.
அல்லேலூயா தடைகளை உடைத்திடுவார்.
அல்லேலூயா வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்.
2. யோபுவைப்போல துன்பங்கள் உந்தன் வாழ்வை சூழ்ந்ததோ?
இழப்புகளால் உறவுகள் வார்த்தையால் உன்னை இகழ்ந்தாரோ?
லாசருபோல் அர்ப்பமாய் பலரும் உன்னை எண்ணலாம்.
ஏழை என்று உலகத்தார் புறம்பே உன்னை தள்ளலாம்.
யோசேப்பைப்போல் சகோதரரால் குழியில் விழுந்தாயோ?
அவர்கள் உன்னை வணங்கிடும் நாள் சமீபம் மறவாதே.
சிறையிருப்பை மாற்றிடுவார், சிங்காரம் தந்திடுவார்
யோசேப்பை உயர்த்தினவர் இன்றும் ஜீவிக்கின்றார்.
3. அன்னாளைப்போல் வெறுமையாய் அழுது புலம்புகின்றாயோ?
வார்த்தைகளால் உறவுகள் சிறுமைப்படுத்துகின்றாரோ?
ரெபெக்காளைப்போல் மலடியென பலர் உன்னை இகழலாம்
இரட்டத்தனையாய் பெருகிடுவாய் காலங்காதே என் மகளே.
மாராவின் கசப்புயெல்லாம் மதுரமாய் மாறிடுமே.
உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பி வழிந்திடுமே.
4. ஊழியப்பாதையில் சோர்வுகள் உன்னை சூழ்ந்து கொண்டதோ?
நிர்ப்பந்தமான மனிதன் நான் என்று புலம்புகின்றாயோ?
ஏசபேலைப்போல் ஊழியத்தில் பலர் உன்னை மிரட்டலாம்
எலியாவின் தேவன் உனக்குள்ளே பதறாதே ஊழியனே.
ஆமானைப்போல பலர் உனக்கு குழியை வெட்டலாம்,
காரியங்கள் மாறுதலாய் முடிந்திடும் திகையாதே.
MOOZHGI NEE POVADILLA was written by TIMOTHY ISAAC.
MOOZHGI NEE POVADILLA was produced by TIMOTHY ISAAC.
Timothy released MOOZHGI NEE POVADILLA on Mon May 30 2022.