இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
ஹே இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ம்ம்ம் வாழ்க்கையே
வாழ தானே
வா என் கண்ணே
வாழ்ந்துதான் பார்போமா
வானவில் கோர்ப்போமா
சாய்கையில் தாங்கதேவை
ஒரு தோள் தானே
தனி மரம் நானடி
தோட்டமாய் நீயடி
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
Ilamai Thirumbudhe was written by Poetu Dhanush.
Ilamai Thirumbudhe was produced by Anirudh Ravichander.
Anirudh Ravichander released Ilamai Thirumbudhe on Sat Jan 05 2019.