[பாடல் வரிகள் - "பூமி பூமி" - ஏ. ஆர். ரகுமான், சக்திஸ்ரீ கோபாலன்]
[Verse 1]
முதல் யாதோ?
முடிவெதுவோ?
முடிவில்லா வானம்
முடிவதுமுண்டோ?
முடியாதென்றோ?
உடலை போலே உயிரும்
அய்யோ, அழிவதுமுண்டோ?
உடலென்ற பாண்டம்
உடைந்துவிடும்
கதறும் மனமே
கவலொரு வேண்டாம்
இலைகள் உதிரும் பொழுதில்
மரம் அழுவதுமில்லை
அஃறிணை போலே அன்றாடம் வாழ்ந்திடு
உலகே...
நிலையில்லயே...
[Chorus]
ஓ, பூமீ, பூமீ
சுத்தும் சத்தம்
ஆழி, ஆழி
கத்தும் சத்தம்
மனிதன், மனிதன்
ஓ, யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா?
[Bridge]
இதயம், தாங்குமா?
இதயம், தாங்குமா?
இதயமே, தாங்குமா, இதயமே?
இதயம், தாங்குமா?
இதயம், தாங்குமா?
இதயம், தாங்குமா?
இதயம், தாங்குமா?
தாங்குமா...
தாங்குமா...
தாங்குமா...
[Chorus]
ஓ, பூமீ, பூமீ
சுத்தும் சத்தம்
ஆழி, ஆழி
கத்தும் சத்தம்
மனிதன், மனிதன்
ஓ, யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா?
[Verse 2]
பாவி நெஞ்சே! பத்த வச்ச, பஞ்சை
பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே
வாழ்வதை விடவும்
வலியே கொடிது
வீழ்வதை விடவும்
பிரிவே கொடிது
கருவறை எல்லாம்
முதலும் அல்ல
முடிவுரை எல்லாம்
முடிவும் அல்ல
கண்ணீர் வருதே
உண்மை சொல்ல
பாழும் மனது
கேட்குதும்மில்ல
நீ எங்கே நீ, எங்கே?
நாளைக்கு நானும் அங்கே
[Chorus]
ஓ, பூமீ, பூமீ
சுத்தும் சத்தம்
ஆழி, ஆழி
கத்தும் சத்தம்
மனிதன், மனிதன்
ஓ, யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்
கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா?
[Outro]
கரைக்கு சேதி வந்து சேருமா?
கரைக்கு சேதி வந்து சேருமா?
Bhoomi Bhoomi was written by Vairamuthu.
Bhoomi Bhoomi was produced by Mani Ratnam.
Ar-rahman released Bhoomi Bhoomi on Wed Sep 05 2018.