ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
கோடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கோடி நான்
என் எண்ணம் எதுவோ ?
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ ?
(ஆகாய சூரியனை ...)
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகத்தை உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
(ஆகாய சூரியனை ...)
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ?
டோரா போற மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி ?
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததும் ஏதோ நிம்மதி !!
(ஆகாய சூரியனை ...)
Aagaya suriyanai - Samuraai was written by Vairamuthu.
Harris-jayaraj released Aagaya suriyanai - Samuraai on Fri Jul 12 2002.