1.உன் மலைக்கு பறந்து செல்
பாவத்தால் சோர்ந்த நீ
தெளிந்த நீரூற்றண்டை போ
கழுவி சுத்தப்பட
பற பகைவன் அருகே
கூப்பிடு உன் மீட்பர் கேட்பார்
தம் மார்பில் அணைத்து கொள்வார்
பாவத்தால் சோர்ந்த உன்னை
ஓ பாவத்தால் சோர்ந்த உன்னை
2. உன்னை என்றும் அவர் காப்பார்
கண்ணீரை துடைப்பார்
உன்னை என்றும் அவர் கைவிடார்
அடைக்கலமாம் அங்கே
நேரம் விரைந்தோடுகின்றதே
நொந்தே அதை வீணாக்காதே
வருந்தி அழுத்திடாதே
மீட்பர் கண்ணீர் துடைப்பார்
இயேசு கண்ணீர் துடைப்பார்
Flee as bird Tamil lyrics was written by Mary S. B. Shindler.